இன்று இரவு 7 மணி முதல் மேலும் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்!

இன்று இரவு 7 மணி முதல் மேலும் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்!

இன்று இரவு 7 மணி முதல் மேலும் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் முல்லேரியா மற்றும் கொத்தட்டுவ பகுதிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கம்பஹா, குளியாப்பிட்டி, கொழும்பு, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 49 பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.

மேலதிக அறிவிப்பு வரும் வரை கொழும்பில் உள்ள மருதானை மற்றும் தெமட்டகொட பகுதிகளிலும் நேற்று இரவு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 05.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆசிரியர் - Editor II