ஒரு இலட்சம் பேருக்கான நற்செய்தி – வவுனியாவில் 112 பேர் தெரிவு!

ஒரு இலட்சம் பேருக்கான நற்செய்தி – வவுனியாவில் 112 பேர் தெரிவு!

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் நியமனம் பெறுவதற்காக 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான பயிலுனர் நியமன கடிதங்கள் பெறுவதற்கு முதல்கட்டமாக 34 ஆயிரத்து 818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பயிலுனர் நியமனக் கடிதங்களை முதல் கட்டத்தில் பெறுவதற்கு வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

தெரிவு செய்யப்பட்டர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும், பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்கள் வெவ்வேறு திணைக்களங்களின் கீழ் நியமிக்கப்பட்டவுள்ளனர்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களில் பாராளுமன்ற உறுபினர்களான கே.கே.மஸ்தான் மற்றும் கு.திலீபன் ஆகியோரின் சிபார்சின் அடிப்படையிலேயே 112 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆசிரியர் - Editor II