விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி..?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மக்கள் செல்வன் என்றழைக்கப்படும் விஜய் சேதுபதி, இவர் சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க போவதாக அறிவித்திருந்த நிலையில் பெரும் சர்ச்சையில் சிக்கித் தவித்தார்.

தொடர்ந்து ஈழத்து தமிழர்களும், தமிழ்நாட்டிலுள்ள ஈழத்து ஆதரவு நிலைப்பாடுகொண்ட தமிழக தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொது மக்களென பலர் கண்டனங்களை தெரிவித்துவந்த நிலையில் 800 திரைப்படத்திருந்து விலகுவதாக அறிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறைக்கொண்ட வெப் சீரியலில் நடிக்கலாம் என்ற தகவல்கள் பரவலாக வருகின்றது..

வீரப்பன் வாழ்க்கை மற்றும் ராஜீவ் கொலை வழக்கை திரைப்படமாக எடுத்த இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய வெப் சீரியலை இயக்க உள்ளதாகவும், எனவே அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அணுகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகப்பூர்வ தகவல்கள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்..

ஆசிரியர் - Editor II