சுவிட்சர்லாந்துக்கு லொறியில் வந்த 16 வயது அகதிச் சிறுவன்

சுவிட்சர்லாந்துக்கு லொறியில் வந்த 16 வயது அகதிச் சிறுவன்

பங்களாதேஷை சேர்ந்த 16 வயது அகதிச் சிறுவன் ஒருவன் செர்பியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்த கண்டெய்னர் லொறி ஒன்றில் ஒளிந்திருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டான்.

Buchs என்னுமிடத்தில் அந்த கண்டெய்னர் லொறி பொருட்களை இறக்கும்போது பொருட்களுக்கு நடுவில் ஒரு சிறுவன் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.

அந்த சிறுவன் அந்த கண்டெய்னர் லொறியில் பொருட்களுக்கு நடுவில் ஒளிந்திருந்து செர்பியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பயணப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

செர்பியாவில் லொறி நிற்கும்போது அந்த சிறுவன் லொறியை மூடியிருந்த தார்பாயை விலக்கி உள்ளே நுழைந்திருக்கலாம். அவன் ஏன் இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டான் என்பது குறித்த தகவல்களை பொலிசார் அளிக்கவில்லை.

அந்த சிறுவன் புகலிடம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டான்.

அந்த லொறிக்கு ஏற்கனவே துருக்கியில் சுங்க முத்திரை வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த லொறியின் ஓட்டுநரோ அல்லது அந்த லொறி தொடர்புடைய நிறுவனமோ சட்ட விரோத மனித கடத்தல் எதிலும் ஈடுபட்டதாக தகவல் எதுவும் இல்லை.

ஆசிரியர் - Editor