அடுத்த ஜி 7 மாநாடு பிரான்சில்

அடுத்த ஜி 7 மாநாடு பிரான்சில்

பிரான்சில் அடுத்த ஜி 7 மாநாடு நடைபெறும் என்று ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

கனடாவில் சமீபத்தில் ஜி 7 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் சந்தித்து பேசிக் கொண்டனர்.

அப்போது டிரம்பின் கையில், பிரான்ஸ் ஜனாதியின் கட்டை விரல் அழுத்தம் இருந்தது. அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியது.

இந்நிலையில் ஜனாதிபதி மேக்ரான் கடந்த சனிக்கிழமை, வரும் ஜனவரி மாதம் 1-ஆம் திகதியிலிருந்து ஜி 7 மாநாட்டுக்கான அனைத்து வேலைகளையும் பிரான்ஸ் அரசு மேற்கொள்ளும் எனவும், 2019 ஆம் ஆண்டுக்கான மாநாடு Pyrénées-Atlantiques இன் Biarritz நகரில் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.

ஆசிரியர் - Editor