ஒரே கலர் டிரஸ்ஸில், ஒட்டி உரசும் காதல் ஜோடி.. கமல் சார் இத கேட்க மாட்டாங்க! அசந்துபோன பிக் பாஸ் ரசிகர்கள்..

ஒரே கலர் டிரஸ்ஸில், ஒட்டி உரசும் காதல் ஜோடி.. கமல் சார் இத கேட்க மாட்டாங்க! அசந்துபோன பிக் பாஸ் ரசிகர்கள்..

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4.

இந்த நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வரும் பாலாஜி முருகதாஸ் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்துகொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஏனெனில் இவர் நேற்றைய நிகழ்ச்சியில் கேபியை ‘தங்கச்சி’ என்று ஒரு போடு போட்டார். இதைக்கேட்ட கேபி, ‘தயவுசெய்து என்ன தங்கச்சின்னு கூப்பிடாத’ என பாலாஜியிடம் கெஞ்சினாள்.

அதன்பின் கமலுடன் சக போட்டியாளர்கள் உரையாட அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்கும்போது, கேபி மற்றும் பாலாஜி இருவரும் ஒரே கலர் டிரஸ்சை போட்டுக்கொண்டு பக்கத்தில் உரசிக்கொண்டு இருந்தபடி அமர்ந்திருந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

ஏனென்றால் அதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் கேபிய, தங்கச்சின்னு கூப்பிட்டுட்டு இப்ப காதல் ஜோடி போல் நடந்து கொண்டது பிக்பாஸ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருப்பினும் இனி வரும் நாட்களில் இவர்கள் காதல் பறவைகளாக பிக் பாஸ் வீட்டில் சுற்றி திரிவார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


ஆசிரியர் - Editor II