வடிவேலின் 15 ஆண்டு சாம்ராஜ்யம் சரிந்ததற்கு முக்கிய காரணம் இதுதான்.!!

வடிவேலின் 15 ஆண்டு சாம்ராஜ்யம் சரிந்ததற்கு முக்கிய காரணம் இதுதான்.!!

தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என்ற கௌரவத்துடன் கொடிகட்டிப் பறந்த காமெடி நடிகர் தான் வடிவேலு. அப்படியிருந்த இவருக்கு சில வருடங்களாக படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று ஓரளவிற்கு நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி இருக்கும் இந்த சூழலில் வடிவேலுடன் பெரும் படங்களில் ஜோடி போட்டு காமெடிகளை தெறிக்கவிட்டவர் தான் சிங்கமுத்து.

இவர் தனது பேட்டியின் மூலம், வைகைப்புயல் வடிவேலின் ஜோதிடர் ரகசியத்தை புட்டுப்புட்டு வைத்துள்ளார். ஏனெனில் சிங்கமுத்து ஒரு ஜோதிடக் கலைஞர் மட்டுமில்லாமல் நடிகர் வடிவேலின் நெருக்கமான நண்பர் என்பதால் அவருடைய ஜாதகம் முழுவதும் சிங்கமுத்து அத்துப்படி.

எனவே வடிவேலின் இந்த சினிமா பயணத்தில் ஏற்பட்ட சறுக்களுக்குமுழு காரணம் அவருடைய ஜாதகத்தில் இருந்த மோசமான திசையே. அதனால் தான் சினிமாவில் 15 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த வைகைப்புயல் வடிவேலு வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தயாரிப்பாளர்களையும், அரசியல் பிரமுகர்களையும் கண்டபடி பேசி வம்பை வழியில இழுத்து போட்டுகிட்டாரு.

அதன் பின்புதான் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது மட்டுமல்லாமல் பிரச்சனைக்கு பயந்து ஓடி ஒளியும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார் வடிவேலு. எனவே வடிவேலு மீண்டும் திரையுலகில் ஜொலிப்பார் என்றால் அவருக்கு நிச்சயம் என்னுடைய முழு சப்போர்ட் இருக்கும். ஏனென்றால் அந்த அளவிற்கு வடிவேலு திறமைசாலி என்று கூறியுள்ளார் சிங்கமுத்து.

அதுமட்டுமில்லாமல் வடிவேலு, சிங்கமுத்துவின் மீது 7 கோடி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சில வருடங்களாக கோர்ட்டில் கேஸ் நடைபெற்று வருகிறது. எனவே இந்த காமெடி நடிகர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள சலசலப்பு விலக வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஆசிரியர் - Editor II