இந்திய வீரர்களுக்கு சவால் விடும் ஆப்கான் வீரர்

இந்திய வீரர்களுக்கு சவால் விடும் ஆப்கான் வீரர்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினிடம் கற்ற வித்தையை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவேன் என்று ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் கூறியுள்ளார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடயேயான வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் 14-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் ஜத்ரன், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினிடம் கற்ற வித்தையை இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தேன். அப்போது வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது, பஞ்சாப் அணியின் தலைவரான ரவிச்சந்திரன் அஸ்வினிடம் சுழற்பந்து வீச்சுக்கு தேவையான பல நுணுக்கங்களை கேட்டறிந்துள்ளேன்.

இதனால் பெங்களூருவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சவாலாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

ஆசிரியர் - Editor