மெனிங் சந்தையை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானம்!

மெனிங் சந்தையை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானம்!

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள மெனிங் சந்தையை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தை பொது வர்த்தக சங்க தலைவர் லால் ஹெட்டிகே இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள புறக்கோட்டை மெனிங் சந்தை நாளை திறக்கப்படுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு புறக்கோட்டை மெனிங் சந்தை நாளை திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மீள திறக்கபடுமென புறக்கோட்டை மெனிங் சந்தை பொது வர்த்தக சங்க தலைவர்

லால்ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II