ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு விவகாரத்தில் தனிச்சிங்கள நியமன கடிதங்களால் வெடித்த சர்ச்சை!

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு விவகாரத்தில் தனிச்சிங்கள நியமன கடிதங்களால் வெடித்த சர்ச்சை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி செயலகத்தின் கீழ் 54 பேருக்கு அரச நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் வேலைவாய்ப்பிற்குகுள் தெரிவு செய்யப்பட்ட 54 பேருக்கான அரச நியமன கடிதங்கள் வழங்கும் நிழக்வு முல்லைத்தீவில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன் போது முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கிவைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா பிரதேசத்தில் 18 பேருக்கும், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 11 பேருக்கும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 9 பேருக்கும், துணுக்காய் பிரதேசத்தில் 6 பேருக்கும், மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 5 பேருக்கும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 05 பேருக்குமாக 54 பேருக்கு அரச நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட நியமனகடிதங்கள் தனி சிங்கள மொழியிலேயே காணப்பட்டுள்ளதுடன் அதனை பெற்று கொண்டவர்கள் அதில் என்ன உள்ளது என்று கூட தெரியாத நிலையில் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

600 பேருக்கு அரச நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும்,இதில் முதற்கட்டமாக 165 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்தும் கட்டம் கட்டமாக அரச நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இவர்கள் நாளை திங்கட்கிழமை அந்தந்த பிரதேச செயலகங்களில் சென்று பரீட்சை ஒன்றினை எதிர்கொண்டு தொடர்ந்து வேலைத்திட்ட தரப்படுத்தலின் கீழ் தரச்சன்றிதழ் கற்கைநெறியும் நடைபெறவுள்ளது.

ஆசிரியர் - Editor II