கார்த்தியை அடித்த சூர்யா

கார்த்தியை அடித்த சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது தன்னுடைய தம்பியான கார்த்தி பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்த கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, சிவகுமார், சத்யராஜ், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கார்த்தி பேசும் போது நகைச்சுவையாக பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது சின்ன வயதில் அண்ணா கிட்ட தண்ணி கேட்டா கூட போய் குடிச்சா குடி இல்லாட்டி போ-னு எட்டி உதைப்பார். எனக்கு அக்கா தான் ரொம்ப புடிக்கும்.

இந்த படத்துல எனக்கு 4 அக்கா எனவும் கூறியுள்ளார். மேலும் அண்ணாவோட தயாரிப்பில் நடிப்பேனு கொஞ்சம் கூட நினைத்து பார்க்கல, அண்ணாவோட நான் சேர்ந்து நடிக்கவும் தயார் என கூறியுள்ளார்.

suriya

ஆசிரியர் - Editor