அபர்ணதி பேச்சால் கடுப்பான விஜய் ரசிகர்கள்

அபர்ணதி பேச்சால் கடுப்பான விஜய் ரசிகர்கள்

சின்னத்திரையில் புதியதாக தொடங்கப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அபர்ணதி. இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோஹினியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று நடந்த எஸ்.ஏ.சியின் டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது எஸ்.ஏ.சியின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும் இனி தளபதி விஜய் சாருக்கு வாய்ப்பு வருமா என்பது சந்தேகம் தான் எனவும் கூறியுள்ளார்.

அந்த அளவிற்கு எஸ்.ஏ.சி சார் அருமையாக நடித்துள்ளார் என பாராட்டியுள்ளார். இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் இந்தாம்மா நீ யாரனா புகழ்ந்துக்கோ அதுல எங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை, ஆனால் இதுல எதுக்கு எங்க தளபதியை இழுக்கிற? என கடுப்பாகி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அபர்ணதிக்கு அழைப்பு வந்ததும் ஆனால் அதனை அபர்ணதி மறுத்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor