73,000 முட்டைகளை திரும்பப் பெறும் ஜேர்மனி

73,000 முட்டைகளை திரும்பப் பெறும் ஜேர்மனி

முட்டைகளில் Fipronil என்னும் பூச்சிக் கொல்லி மருந்து இருப்பது தெரிய வந்ததையடுத்து ஆறு ஜேர்மானிய மாகாணங்கள் சுமார் 73,000 முட்டைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

நெதர்லாந்தில் உள்ள பசுமைப் பண்ணை ஒன்றிலிருந்து வந்துள்ளதாகவும் அவற்றால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும் Lower Saxonyயிலுள்ள விவசாயத்துறை அதிகாரிகள் வாதிட்டனர்.

Fipronil பேன்களை ஒழிக்கக்கூடியது, ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அதை கோழிகள் மீது பயன்படுத்த தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டும் முட்டைகளில் Fipronil இருப்பதாக அச்சத்தின்பேரில் சூப்பர்மார்க்கெட்களிலிருந்து முட்டைகள் திரும்பப் பெறப்பட்டன.

தற்போது Vechta என்னும் ஜேர்மானிய நகரின் முட்டைகளை பேக் செய்யும் கிடங்கிலிருந்து பெறப்பட்ட முட்டைகளில் பூச்சி மருந்து இருப்பதை கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்தின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, Fipronil கண்டு பிடிக்கப்பட்டதற்கும், சமீபத்தில் பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும்தொடர்புள்ளதா என ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஒருவேளை கோழிப்பண்ணையிலுள்ள Fipronil கலந்த மண்ணிலிருந்து இந்த நச்சு பரவியிருக்கலாம் என்றும் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஆசிரியர் - Editor