கோடி ரூபாய் கொடுத்தாலும் என்னால் அவருக்கு விவாகரத்து வழங்க முடியாது : நவீன் விவகாரத்தில் புதிய திருப்பம்

கோடி ரூபாய் கொடுத்தாலும் என்னால் அவருக்கு விவாகரத்து வழங்க முடியாது : நவீன் விவகாரத்தில் புதிய திருப்பம்

கோடி ரூபாய் கொடுத்தாலும் மிமிக்ரி கலைஞர் நவீனை விவாகரத்து செய்ய முடியாது என திவ்யலட்சுமி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யார் மூலம் பிரபலமான நவீன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக திவ்யலட்சுமி என்ற பெண் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அதாவது கடந்த 2016-ல் நவீனும் தானும் திருமணம் செய்து கொண்டதாகவும் பின்னர் பேரும் புகழும் கிடைத்த பின்னர் மலேசியாவில் உள்ள பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் திவ்யலட்சுமியை தான் திருமணம் செய்யவில்லை என நவீன் கூறினார்.

இதனிடையில் திவ்யலட்சுமியிடம் நவீனை விவாகரத்து செய்ய பேரம் பேசப்படுவதாக கூறப்பட்டது. இது குறித்து தற்போது பேசிய திவ்யலட்சுமி, இரண்டாவது திருமணத்துக்காக என்னிடம் பேரம் பேசுகின்றனர்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் என்னால் அவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஆசிரியர் - Editor