சுகாதார அமைச்சுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கிய கொரிய அமைப்பு

சுகாதார அமைச்சுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கிய கொரிய அமைப்பு

கொரோனா ரைவஸ் பரவலுக்கு மத்தியில் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் இன்று (28) சகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

'பட்டினியால் வாடுவோருக்கு உதவி வழங்கும் கொரியாவின் அமைப்பு' இந்த பாதுகாப்பு உபகரணங்களை பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கி வைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

சுகாதார பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரண்ஙகள் உள்ளிட்ட ஆடைகள் 1008ம், பாதுகாப்பு கண்ணாடிகள் 480 மற்றும் கையுறைகள் 200ம் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor II