லிந்துலை நகரசபை தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தம்

லிந்துலை நகரசபை தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தம்

தலவாக்கலை – லிந்துலை நகரசபை தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர், சட்டத்தரணி லலித் யூ.கமகேவினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் நகரசபையின் தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தப்படுவதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கான அதிகாரங்களை செயற்படுத்துவதற்கான அனுமதியை நகர சபையின் பிரதி தலைவர் லெட்சுமன் பாரதிதாசனுக்கு வழங்குவதாகவும் மத்திய மாகாண ஆளுநரால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II