சூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்தல் – மடக்கிப் பிடித்த பொலிஸார்!

சூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்தல் – மடக்கிப் பிடித்த பொலிஸார்!

அண்மைய காலமாக  சட்டவிரோத மரக்கடத்தல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதோடு, அவை பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக கிளிநொச்சி, பூநகரி, வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் சட்டவிரோத மரக்கடத்தல்கள் தொடர்பான விசேட சோதனை நடவடிக்கைகளில் பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை ஜெயபுரம் காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சூட்சுமமாக முதிரை மரக்குற்றிகளை ஏற்றிப்  பயணித்த டிப்பர் வாகனத்தில் முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது மரக்குற்றிகளை கற்களால் மறைத்து சூட்சுமமான முறையில் கடத்த முற்றப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த மரக்கடத்தல் விவகாரத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரும் , குறித்த டிப்பர் வாகனமும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட முதிரை மரக்குற்றிகளின் பெறுமதி 10 இலட்சம் ரூபா மதிப்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபருக்கெதிராக நீதிமன்றில் வழக்கு தொடர உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் - Editor II