வைரலாகும் மோடியின் பிட்னஸ் சவால் வீடியோ

வைரலாகும் மோடியின் பிட்னஸ் சவால் வீடியோ

சமீபத்தில் விராட் கோலி மத்திய விளையாட்டுத்துறை மந்திரியான ராஜ்யவர்தன் சிங் ரத்தோரின் பிட்னஸ் சவாலுக்கு ஏற்ப தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை ட்வீட்டரில் டேக் செய்தார்.

இந்நிலையில் இந்த சவாலை ஏற்ற பிரதமர் மோடி, தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.

அதுபோல் இன்று பிரதமர் மோடி விராட் கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

காலை நேர உடற்பயிற்சி மற்றும் யோகா மட்டுமின்றி நடைபயிற்சி மேற்கொள்வதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார்.

குறித்த வீடியோவில் இந்த பயிற்சிகள் தனக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் மணிகா பத்ரா துணிச்சலான ஐ.பி.எஸ். அதிகாரிகள், குறிப்பாக 40 வயதுக்குமேல் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளார்

தற்போது இந்த பிட்னஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆசிரியர் - Editor