கள்ளக்காதலியின் மாமியாரை கொன்றது ஏன்? திடுக்கிடும் வாக்குமூலம்

கள்ளக்காதலியின் மாமியாரை கொன்றது ஏன்? திடுக்கிடும் வாக்குமூலம்

உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டதால் கள்ளக்காதலியின் மாமியாரை கொன்றதாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாகை மாவட்டம் மானாம்பேட்டை காலனி தெருவை சேர்ந்தவர் விஜயா(வயது 55), கடந்த 2016ம் ஆண்டு யூன் 23ம் திகதி விறகு வெட்டுவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை.

இவரை தேடிப் பார்த்த போது புளியங்கூண்டு கொல்லையில் இறந்து கிடந்தது தெரியவந்தது, இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த டவுன் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விஜயாவின் 2வது மகன் செந்தில்(வயது 28), அவரது மனைவி பரிமளா(வயது 23), மற்றும் கள்ளக்காதலன் சின்னமணி(வயது 34) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் உண்மைகள் வெளிவந்துள்ளன.

சின்னமணி அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும், பரிமளாக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது, விறகு வெட்டுவதற்காக வந்த விஜயா நாங்கள் உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டார்.

எங்களை கடுமையாக திட்டினார், ஊருக்குள் சென்று கூறி அசிங்கப்படுத்திவிடுவார் என பயந்து கட்டையால் அடித்தோம்.

ரத்த வெள்ளத்தில் சரிந்தார், அவரது உடலை முட்புதரில் வீசும்போது செந்தில் பார்த்துவிட்டார்.

இதை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என செந்திலை மிரட்டினேன், உயிருக்கு பயந்து அவரும் யாரிடமும் சொல்லவில்லை.

பொலிஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டோம் என கூறியுள்ளார், இதனையடுத்து மூவரையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர் - Editor