மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

தமிழகத்தில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த வழக்கில் தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ராமேஸ்வரம், கரையூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி மாரிமுத்து (51)-தனுஷ்பானு. கடந்த 2013-ஆம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தனுஷ்பானு தனது 9 வயது மகளையும், மகனையும் கரையூரிலுள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் தனுஷ்பானுவின் மகள் ராமேஸ்வரம் கடற்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனால் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்து உடலை கடலில் வீசியதாக மாரிமுத்துவை பொலிசார் கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி மாரிமுத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டார்

அப்போது அவர் சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுக்குப் பிறகே மாரிமுத்துவை பொலிசார் கைது செய்து ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி மாரிமுத்து கடற்கரையில் தனது மகளை மடியில் போட்டு அழுதுகொண்டிருந்ததாக பொலிசார் கூறியுள்ளதால், அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ததாக கூறுவது நம்பும்படியாக இல்லை என்று கூறியுள்ளார்.

இதை ஏற்ற நீதிபதி மாரிமுத்துவுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.

இதையேற்று, மாரிமுத்துக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆசிரியர் - Editor