சிங்கப்பூரில் டொனால்ட் டிரம்புக்கு வழங்கப்பட்ட சிக்கலான உணவுப்பட்டியல்

சிங்கப்பூரில் டொனால்ட் டிரம்புக்கு வழங்கப்பட்ட சிக்கலான உணவுப்பட்டியல்

சிங்கப்பூரில் வழங்கப்பட்ட பெரும்பாலான உணவுகள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பரீட்சியமில்லாத உணவுகள் என்பதால் அவருக்கு அது சிக்கலாக அமைந்துள்ளது.

"தேன் கலந்த எலுமிச்சையுடனான பச்சை மங்காய் கெராப் மற்றும் நட்சத்திர மீன்", "ஓசியான் - கொரிய உணவுகள் அடைக்கப்பட்ட வெள்ளரி", "டேகு ஜோரிம் - முள்ளங்கியோடு சோயா குழம்பாக சமைக்கப்பட்ட மீன்", ஆசிய காய்கறிகள் இந்த உணவு பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

ஆக்டோபஸ் போன்ற சில உணவு வகைகளை அதிபர் டிரம்ப் சாப்பிடுவாரா என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தக்காளி கெச்சப்புடன் நன்றாக சமைத்த இறைச்சியை விரும்புகின்ற டொனால்ட் டிரம்புக்கு பெரும்பாலும் இந்த உணவு பட்டியல் சிக்கலாக அமைந்திருக்கும் என சமூகவலைதளவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உணவில் அதிபர் டிரம்பின் விரும்பத்தை நிறைவேற்றுவதற்கு ராஜீய அதிகாரிகள் மிகவும் கவனமாக இருந்துள்ளனர். இந்த விருந்தை அவர் விரும்பி உண்பதற்கு ஏற்ற வகையில் இந்த உணவு பட்டியல் உருவாக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தங்கள் நாட்டிற்கு வந்துள்ள நாடுகளின் உயரிய தலைவர்களுக்கு தங்கள் நாட்டின் சுவையான உணவு வகைகளை கொடுக்க சிங்கப்பூர் தவறிவிடவில்லை.

ஆசிரியர் - Editor