நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க தீர்மானம்

நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க தீர்மானம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுப்பதற்கு நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்தல், கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 இதனைத் தவிர, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஏனைய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை, விளம்பரத்தினூடாக அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II