மர்மக் கும்பலின் கோரச்செயல் - நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட மாணவன்!

மர்மக் கும்பலின் கோரச்செயல் - நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட மாணவன்!

இந்தியாவில் தாம்பரம் அருகே பாடசாலை மாணவன் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5 பேர் கொண்ட மர்மக் கும்பல் மாணவனை நடுவீதியில் வழிமறித்து சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் நேற்யைதினம் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது இடைமறித்த மர்ம கும்பல் மாணவன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

தகவலறிந்து குறித்த பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் - Editor II