பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்

பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து வரும் ஜூன் 17-ம் தேதி முதல் இரண்டாவது சீசன் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.

20 பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ள இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியுள்ளது விஜய் டிவி. ஆம் இரவு 7 மணிக்கே பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

ஓரளவிற்கு அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு பிக் பாஸ் பார்க்க ரசிகர்களுக்கு முதல் சீஸனின் ஒளிபரப்பு நேரம் ஏதுவாக இருந்தது. ஆனால் தற்போது 7 மணிக்கே என்பதால் ஒரு சிலர் தொடர்ச்சியாக நிகழ்ச்சியை பார்ப்பது கஷ்டம் என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

bigg boss

ஆசிரியர் - Editor