பொது இடத்தில் ஹரி- மெர்க்கல் ஜோடியைப் பார்த்து திகைத்துப் போன மக்கள்

பொது இடத்தில் ஹரி- மெர்க்கல் ஜோடியைப் பார்த்து திகைத்துப் போன மக்கள்

திடீரென்று பொது இடத்தில் ஹரி மெர்க்கல் ஜோடியைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

ஆம், Madame Tussauds அருங்காட்சியகத்திற்கு சென்ற பொதுமக்கள் ஹரி மெர்க்கல் ஜோடியின் மெழுகுச் சிலைகளைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.

ஹரியின் மெழுகுச் சிலையை மக்கள் அந்த அருங்காட்சியகத்தில் 2014ஆம் ஆண்டே பார்த்திருந்தாலும் தற்போது அவருடன் ஜோடி சேர்ந்துள்ள மேகனின் சிலை கன கச்சிதமாக, சிலை என்றே கூற இயலாத அளவிற்கு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மேகனின் முதல் மெழுகுச் சிலை என்பது இன்னொரு முக்கிய தகவல். மேகன் கையில் இளவரசர் ஹரி வடிவமைத்த மோதிரத்தைப் போன்றே காட்சியளிக்கும் ஒரு மோதிரம் ஜொலிக்கிறது.

தற்போதும் ஹரி மேகனின் ஆடை வடிவமைப்பாளரை விட சிறப்பான முறையில் ஆடைகள் குறித்த டிப்ஸ் கொடுத்து வரும் விடயத்தை பலரும் அறிவார்கள்.

ஆசிரியர் - Editor