கிம்மை கட்டிப்பிடித்த டிரம்ப் : வேடிக்கையாக தெரிவித்த பிரான்ஸ்

கிம்மை கட்டிப்பிடித்த டிரம்ப் : வேடிக்கையாக தெரிவித்த பிரான்ஸ்

G7 மாநாடு முடிந்த கையோடு மிக நீண்ட காலமாக கூட்டாளிகளாக இருந்த நட்பு நாடுகளையே கழற்றி விட்டு விட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரிய அதிபரைக் கட்டிப் பிடித்ததைக் கண்டு வட கொரியாவுக்கு என்ன நிகழுமோ என்று பயப்படுவதாக பிரான்ஸ் வேடிக்கையாக தெரிவித்துள்ளது.

ஏனென்றால் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்திக்கும்போதும் டிரம்ப் இப்படித்தான் அவரைக் கட்டிப் பிடித்தார். இரண்டு மாதங்களுக்குள் அந்த உறவு கேள்விக்குறியாகி விட்ட நிலையில், வட கொரியாவுடனான உறவு என்ன ஆகுமோ என பிரான்ஸ் வெளியறவுத் துறை அமைச்சர் Jean-Yves le Drian கிண்டலாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் வட கொரிய அதிபர் டிரம்புக்கும் இடையிலான வரலாற்றுப்பூர்வ சந்திப்பு சந்தேகத்துக்கிடமின்றி முன்னோக்கிய ஒரு அடிதான் என்று தெரிவித்துள்ள Jean-Yves le Drian, ஆனால் அமெரிக்க அதிபரின் தொடர்ச்சியான சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் குறித்துதான் தனக்கு கவலை என்றும் தெரிவித்துள்ளார்.

வெகு நீண்ட கால கூட்டாளியான கனடா அதிபரான ஜஸ்டின் ட்ரூடோவை ஒரு நாள் இடைவெளியில் தாக்கியதை பார்த்தோம், G7 மாநாட்டைத் தொடர்ந்து மொத்த கூட்டாளிகளையும் அவர் கழற்றி விட்டதையும் பார்த்தோம்.

சில நாட்களுக்குமுன் பயங்கரமாக எதிர்த்த முழு கம்யூனிஸ்ட் சர்வாதிகாரத்தில் பிறந்த ஒரு சர்வாதிகாரியை அடுத்த நாள் அவர் கட்டிப் பிடிக்கிறார்.

இதனால் நிலையற்ற ஒரு சூழலில் நாங்கள் இருக்கிறோம் என்று அவர் கூறினார். பல அதிகாரிகளைப் போலவே, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிப்பதாக கூறியுள்ள வட கொரிய அதிபர் கிம்மின் வாக்கை அவர் எப்படி காப்பாற்றப் போகிறார் என Le Drian கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor