இந்து சமய விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூரில் போராட்டம்.

இந்து சமய விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூரில் போராட்டம்.
இந்து சமய விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் மாபெரும் கண்டனப் போராட்டமொன்று இன்று (13) மாலை முன்னெடுக்கப்பட்டது.

இந்து மத விவகார அமைச்சராக இந்து மதத்தைச் சேர்ந்த டி.எம். சுவாமிநாதன் இருக்கின்ற நிலையில் அதன் பிரதி அமைச்சராக முஸ்லிம் மதத்தைச் சேரந்த காதர் மஸ்தான் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இதற்கு இந்து மத அமைப்புக்கள் உட்பட இந்து மதத்தைச் சேரந்த பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சைவமகா சபையின் ஏற்பாட்டில் பிரதி அமைச்சர் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


 
ஆசிரியர் - Sellakumar