யாழில்.ஊடகவியலாளர் ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில்.ஊடகவியலாளர் ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில்.ஊடகவியலாளர் ஒருவரை இனம் தெரியாத நபர் இருவர் கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி உள்ளார் என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான த. வசந்தரூபன் என்பவரே இன்று (13)  காலை இனம் தெரியாத இரு நபர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தனது பிள்ளையை பாடசாலைக்கு கொண்டு சென்று விட்டு திரும்பி வரும் போது இரு சந்தேக நபர்கள் யாழ்.சட்டநாதர் சிவன் கோயிலுக்கு முன்னால் பருத்தித்துறை வீதியில் இடைமறித்து இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ள செய்தி ஒன்றினை அகற்றக் கோரியுள்ளனர்..அந்தச் செய்திக்கும் தனக்கும் அந்த இணையத்தளத்திற்கும் தொடர்பில்லை என கூறியுள்ளார். அதனை அடுத்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தூசண வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர்.  

அதனையடுத்து  ஊடகவியலாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். ஆசிரியர் - Sellakumar