இந்து கலாச்சார அலுவல்கள் பிரதியமைச்சராக முஸ்லிம் ஒருவரின் நியமனம் இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடாகும். -- ரஜீவன் தெரிவிப்பு.

இந்து கலாச்சார அலுவல்கள் பிரதியமைச்சராக முஸ்லிம் ஒருவரின் நியமனம் இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடாகும். -- ரஜீவன் தெரிவிப்பு.
இந்து கலாச்சார அலுவல்கள் பிரதியமைச்சராக முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டமையானது இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடு என வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தேவராஜா ரஜீவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,  அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது.

இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சின் பிரதியமைச்சராக ஒர் முஸ்லிம் இனத்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். இச் செயற்பாடானது இந்து மதத்தவரது புனிதத் தன்மையை கொச்சைப்படுத்தும் செயற்பாடாகும்.

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொள்ளுகின்ற இவ் அரசாங்கம் உண்மையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய விடயங்களை மறந்து அல்லது அதில் இன்னமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி இவ் பிரதியமைச்சு விவகாரத்தை மீள் பரிசீலனை செய்து இந்து மதத்தவர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-- 

ஆசிரியர் - Sellakumar