இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ, கபுருவரல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இன்று (13) மாலை 6.50 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கதருவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்த ​பேருந்து ஒன்றுடன் மோதி இரண்டு பேருந்துகளும் பாதையை விட்டு விலகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 26 பேர் அலவ்வ மற்றும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஆசிரியர் - Editor