விகாராதிபதியின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இனம் காணப்பட்டார்

விகாராதிபதியின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இனம் காணப்பட்டார்

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதியின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளார். 

பிரதான சந்தேக நபராக மஹாசென் ஆலயத்தின், முன்னாள் கப்புராளை போப்பே கெதர அசேல லக்ஷ்மன் பண்டார பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

முன்னாள் கப்புராளை போப்பே கெதர அசேல லக்ஷ்மன் பண்டாரவின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாள் உட்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor