பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பதவியில் இருந்து இந்து விவகாரத்தை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பதவியில் இருந்து இந்து விவகாரத்தை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பதவியில்  இருந்து இந்து விவகாரத்தை நீக்குவது குறித்து தற்போது ஆலோசிக்கப்படுகிறது

பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இன்று (14) இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திபிலேயே காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சர் பதவியில் இந்து மத விவகார விடயதானத்தை விலக்கிக் கொள்வது தொடர்பிலேயே தற்போது கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. 

இதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு, மீள் குடியேற்ற புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து விவகார அமைச்சின் பிரதி அமைச்சு பதவிவழங்கப்பட்டது. 

இந்தநிலையில், இந்து விவகாரம் அவருக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவரது பிரதியமைச்சு விடயதானத்தில் இருந்து இந்து விவகாரத்தை நீக்குவது குறித்து தற்போது ஆலோசிக்கப்படுகிறது 

இந்த விடயத்தை வலியுறுத்தி பம்பலபிட்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. நேற்று யாழிலும் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Sellakumar