சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு சென்ற இலங்கையர்கள், லூசியானா மாநிலத்தில் தடுத்து வைப்பு.

சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு சென்ற இலங்கையர்கள், லூசியானா மாநிலத்தில் தடுத்து வைப்பு.

சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு சென்ற சில இலங்கையர்கள், லூசியானா மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், தற்போது வடமேற்கில் உள்ள பொசியர் தேவாலய பாதுகாப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த ஏதிலிகளின் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட நிதியையும் அமெரிக்க அரசாங்கம் குறைத்துள்ளது. இதன் காரணமாக அவர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 102 பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் - Sellakumar