இலங்கையராக நாடு மேலும் தன்னிறைவு அடைவதற்கு பொருளாதார இலக்கு நோக்கி நகர்வுகளை முன்னெடுப்போம் -- அங்கஜன் தெரிவிப்பு.

இலங்கையராக நாடு மேலும் தன்னிறைவு அடைவதற்கு பொருளாதார இலக்கு நோக்கி நகர்வுகளை முன்னெடுப்போம் -- அங்கஜன் தெரிவிப்பு.

இலங்கையராக நாடு  மேலும் தன்னிறைவு அடைவதற்கு பொருளாதார இலக்கு நோக்கி நகர்வுகளை முன்னெடுப்போம் என்று விவசாய பிரதி அமைச்சரும்,யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

 யூன் 12 நேற்று முன்தினம் தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் விவசாய பிரதி அமைச்சராக நியமித்தமைக்கு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கும், இலங்கை நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்து அங்கஜன் தனது ஊடக அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது

இலங்கை தேசம் இந்து சமுத்திரத்தின் முத்தாக வர்ணிக்கப்படுவதற்கு காரணம்  எமது நாட்டின் வளங்களேயாகும்.எமது நாட்டின் முதுகெலும்பாக காணப்படும் விவாசாயம், கடந்த கால யுத்தத்திற்கு பின்னர் விளை நிலங்கள் தரிசுநிலங்களாக காணப்பட்டது. யுத்தத்திற்கு முன்பு இருந்ததை விட தற்பொழுது நாட்டில்  எமக்கு தேவையான உணவுகளை நாமே உற்பத்தி செய்வதோடு இல்லாமல் நாடு தன்னிறை அடைவதற்கு விவசாய உற்பத்திகளின் பணப்பயிர் செய்கைகளின்  ஏற்றுமதிகளையும் நாம் அதிகரிக்க வேண்டும்.

எமது நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இணைந்து விவசாய மக்களின் நலத்திட்ட கொள்கைகள்  வெற்றியளிக்க வடக்கு மக்கள் சார்ந்தும் ஒட்டு மொத்த இலங்கை நாட்டவராக எனது பயணம் தொடரும் வேளை, அர்ப்பணிப்பான நகர்வுகளை முன்னெடுப்பதற்காகவும்  உள்ளேன்.

கிராம சக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்’ என்ற அபிவிருத்தித் திட்டம் வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் ‘கிராமசக்தி கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம் தேசத்தின் எழுச்சிக்காக உறுதுணையாக அமையும்..

மேலும், விவசாய அமைச்சின்  விவசாய திணைக்களங்கள்,கமத்தொழில் திணைக்களங்கள் மக்களுக்கான அர்ப்பணிப்பான சேவையை முன்னெடுப்பதற்காக ஒன்றிணைவோம்.

விவசாயத்துறைசார்  வல்லுனர்கள்,ஆராய்ச்சியாளர்கள்,அதிகாரிகள்,ஆகியோரையும் பசுமையான  தேசத்தின் விளைதிறனுக்காக ஆரோக்கியமான பயணப் பாதையில் பயணிக்க அழைப்பு விடுகின்றேன்.

 எமது நாட்டில் முன்னெடுக்கப்படும் கமத்தொழில் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நாணயமான முறைமையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.கிராமத்தின் எழுச்சிக்காகவும்  தேசத்தின் வளர்ச்சிக்கான பயணப் பாதையில் மாவட்ட செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,விவசாய சம்மேளன கமத்தொழில் சார்ந்த கண்ணியமான கடமையாளர்களை எமது தேசத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து முன்னேற்ற பாதையில் பயணிப்பதோடு,பசுமையான தேசம் எமது பாரம்பரிய உணர்வுகளோடும் உறவுகளோடும் சங்கமிக்கும் என கூறி தேசத்தின் ஒன்றிணைந்த வெற்றிக்காக ஒன்றிணைய  நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  என்றுள்ளது. 

 

ஆசிரியர் - Sellakumar