யாழ்.தீவக வலய பாடசாலைகளின் அதிபர்களை மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்.தீவக வலய பாடசாலைகளின் அதிபர்களை மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்.தீவக வலய பாடசாலைகளின் அதிபர்களை மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் இன்று(14) சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன். தீவக வலய பாடசாலைகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளார். 

இச் சந்திப்பு இன்று காலை தீவக வலயத்தில் இடம்பெற்றது. இதன்போது தீவக வலயத்தில் உள்ள 64 பாடசாலைகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் தமது பாடசாலைகளில் உள்ள தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருக்கு கூறியிருந்தனர். 

குறிப்பாக போக்குவரத்து வசதியின்மை மற்றும் தளபாடங்கள் இன்மை போதிய கட்டிட வசதியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டியிருந்தனர். 

இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தீவக வலயத்தில் உள்ள 64 பாடசாலைகளில் 24 பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களே சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான வசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது. எனவே தீவக கல்வி வலயத்தை விசேட கல்வி வலயமாக பிரகடனப்படுத்தி அங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்படவேண்டும். அதன் ஊடாகவே ஆசிரியர்களிடமிருந்து சிறந்த சேவையை எதிர்பார்க்க இயலும் என கூறியிருந்தார். 

இதற்கமைய எதிர்வரும் யூலை மாதம் 5ம் திகதி கொழும்பில் மாகாண கல்வி அதிகாரிகள் வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் வகையில் கூட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் தீவக கல்வி வலயத்திற்கு அதிகளவு பௌதீக வளங்களை வழங்குதல் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குதல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது. 

ஆசிரியர் - Sellakumar