விடுதலைப் புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து சுவிற்சர்லாந்து நீதிமன்றம் இன்று தீர்பளித்தது.

விடுதலைப் புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து சுவிற்சர்லாந்து நீதிமன்றம் இன்று தீர்பளித்தது.

விடுதலைப் புலிகள் மீது கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு போன்ற குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து சுவிற்சர்லாந்து நீதிமன்றம்  இன்று (14) தீர்பளித்தது.

சுவிற்சர்லாந்து நாட்டின் தமிழ் செயற்பாட்டாளர்களை குற்றவியலாளர்களாக சித்தரித்து திட்டமிட்டு தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை களங்கப்படுத்தவென தொடரப்பட்ட பெலின்சோனா வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. 

குலம், அப்துல்லா, மாம்பழம் மூவரும் வங்கிக்கடன் பெறுவதில் நடைபெற்ற மோசடிக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடுப்புத் தண்டனையும், அபராதம் செலுத்தவும் பணிக்கப்பட்டார்கள்.

யோகேஸ், குமார், கவிதாஸ், சிவலோகநாதன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றத்தில் இருந்து விடுவித்து இழப்பீடும் வழங்கப்பட்டது.

ஆசிரியர் - Sellakumar