பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்..!

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்..!
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடரை இழந்ததை தொடர்ந்து, டெஸ்ட் அணியின் கேப்டனான 35 வயது அசார் அலி மாற்றம் செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாயின. 

இந்நிலையில், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அசார் அலி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக 26 வயதான பாபர் அசாம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

20 ஓவர் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான பாபர் அசாம் இனிமேல் 3 வகையான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டிக்கும் கேப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அடுத்த மாதம் இறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து சென்று 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குரிய இந்த தொடரின் முதலாவது ஆட்டம் மவுன்ட்மாங்கானுவில் டிசம்பர் 26 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
ஆசிரியர் - Editor II