8 குழந்தைகளை கொன்ற தாதி கைது : இங்கிலாந்து மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

8 குழந்தைகளை கொன்ற தாதி கைது : இங்கிலாந்து மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!
இங்கிலாந்து மருத்துவமனையில் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 10 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக நர்சை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள செஸ்டர் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் லூசி லெட்பை (வயது30). இந்த மருத்துவமனையில் கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை 15 பச்சிளம் குழந்தைகள் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. 

இதில் சந்தேகத்தின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு நர்சு லூசி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 6 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக நர்சு லூசியை பொலிசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

தற்போது பொலிஸ் பிடியில் இருக்கும் லூசி மீது 10 குழந்தைகளை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தைகளை கொன்றது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியர் - Editor II