ஜெனீவாவில் 26.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போன அரிய வகை பர்பிள்-பிங்க் வைரக்கல்..!

ஜெனீவாவில் 26.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போன அரிய வகை பர்பிள்-பிங்க் வைரக்கல்..!
அண்மையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அரிய வகை பர்பிள்-பிங்க் வைரக்கல் 26.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது.

கடந்த 2017-ம் ஆண்டு ரஷ்யாவின் வைர சுரங்கத்திலிருந்து பர்பிள்-பிங்க் அரிய வைரக்கல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 14.83 காரட். பார்க்க முட்டை வடிவில் இருக்கும் இந்த வைரக்கல்லை இயற்கையின் அதிசயம் என அழைக்கின்றனர் அரிதான பொருட்களை சேகரிக்கும் ஆர்வலர்கள்

இந்த வைரக்கல் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஏலம் விடப்பட்டது. 16 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஆரம்பமான ஏலம் 21 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போயுள்ளது. 

அதோடு ஏல கம்பெனிக்கு சேர வேண்டிய கமிஷனையும் சேர்த்து 26.6 மில்லியனுக்கு வாங்கியுள்ளார் ஒருவர். அவரது வேண்டுகோளுக்கு ஏற்ப வைரக்கல்லை வாங்கியவரின் விவரத்தை வெளியிடாமல் உள்ளது ஏலம் விட்ட நிறுவனம் SOTHEBY.

எதிர்வரும் நாட்களில் இந்த வைரக்கல் அதிகளவில் விலை போகும். இதனை வாங்கியவர் அதிர்ஷ்டசாலி என தெரிவித்துள்ளார் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜுவல்லரி அதிபரான டோபியாஸ் கோர்மின்ட்.
ஆசிரியர் - Editor II