குஷ்புவின் கார் விபத்து ஒரு செட் செய்து எடுக்கப்பட்ட விபத்து : விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்..!

குஷ்புவின் கார் விபத்து ஒரு செட் செய்து எடுக்கப்பட்ட விபத்து : விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்..!
திரைப்பட நடிகையும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு தனது காரில் செங்கல்பட்டு அடுத்த மேல்மருவத்தூர் அருகே சென்றுகொண்டு இருந்தபோது, முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் திடீரென மோதியுள்ளது. இந்த விபத்தில் காரின் பின்பக்க கதவு சேதமடைந்தது. ஆனால் இது செட் செய்து எடுக்கப்பட்ட விபத்து என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்..,

காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகர் குஷ்பு, சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று காலை தன்னுடைய காரில் வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மதுராந்தகம் அருகே வைத்து குஷ்புவின் கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளான நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் குஷ்புவின் கார் பலத்த சேதமடைந்தது. அவரது காரின் கண்ணாடி மற்றும் கதவு உடைந்து போயிருந்தது.

இந்த விபத்து குறித்து மதுராந்தகம் பொலிசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், கண்டெய்னர் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ் விபத்து தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு, தன் மீது குறி வைத்தே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், சரியான பாதையில் வந்த காரின் மீது எங்கிருந்தோ வந்த லாரி வேண்டுமென்றே மோதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து ட்விட்டரில் பலர் அவருக்கு ஆதரவாகவும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். 

அந்தவகையில் ஒருவர் தனது ட்விட்டரில், குஷ்புவின் கார் விபத்தில் சிக்கிய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு, இந்த விபத்து செட் செய்து எடுக்கப்பட்ட விபத்து தான் என்றும், அற்புதமாக இந்த விபத்தை படம் பிடித்துள்ளீர்கள் எனவும் கூறி குறிப்பிட்டிருந்தார். 

இதற்குப் பதிலடி கொடுத்த குஷ்பு.., 

"ஒரு முட்டாள் எப்போதும் முட்டாளாகவே இருக்கிறான். அந்த இரண்டு புகைப்படங்களில் ஒரே ஆடையின் நிறம் தான் உங்களுக்கு தெரிகிறதா..?. அல்லது நீங்கள் பார்வைத் திறன் இழந்தவரா..?. அடுத்த தடவை பேசுவதற்கு முன் உங்களது பயன்படாத மூளையை சற்று பயன்படுத்தி பேசுங்கள்" என சற்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். 

இந்த பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. 
ஆசிரியர் - Editor II