மறுமணம் செய்ய மறுத்த மருமகளின் நாக்கையும், மூக்கையும் அறுத்த மாமியார் : அதிர்ச்சி சம்பவம்..!

மறுமணம் செய்ய மறுத்த மருமகளின் நாக்கையும், மூக்கையும் அறுத்த மாமியார் : அதிர்ச்சி சம்பவம்..!
ராஜஸ்தான் அருகே, மறுமணம் செய்ய மறுத்த மருமகளின் நாக்கையும், மூக்கையும் அறுத்த மாமியார் பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சங்க்ரா பொலிஸ் நிலைய எல்லையில் வசித்த 30 வயதான பெண் ஒருவர் ஜோத்பூர் மருத்துவமனையில் மூக்கு மற்றும் நாக்கு அறுபட்ட நிலையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். 

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், ஜானு கான் என்பவரை கைது செய்தனர். பெண்ணின் மூக்கை அறுப்பதற்கு அவருக்கு உடந்தையாக செயல்பட்ட கூட்டாளிகள் இருவரையும் பொலிசார் பிடித்து வைத்துள்ளனர்.

மூக்கு அறுபட்ட இளம்பெண், விதவை ஆவார். அவரது மாமியாரான ஜானு கான், மருமகளை தனது உறவினர் ஒருவருக்கு மறுமணம் செய்து வைக்க தீர்மானித்தார். அதற்கு அவர் சம்மதிக்காததால், உறவினர்களுடன் சேர்ந்து அவரது மூக்கு மற்றும் நாக்கை மாமியார் அறுத்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினரால் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆசிரியர் - Editor II