லாஸ்லியாவின் தந்தையின் திடீர் மரணத்திற்கான காரணம் : உறவினர் விளக்கம்..!

லாஸ்லியாவின் தந்தையின் திடீர் மரணத்திற்கான காரணம் : உறவினர் விளக்கம்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரணம் குறித்து வெளியாகி வரும் செய்திகளுக்கு அவரது உறவினர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர் லாஸ்லியா. அந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு நடிகையாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் அவரது தந்தை மரியநேசன் கனடாவில் பணியாற்றி வந்தார். அவர் இறந்த செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதனிடையே சிலர் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறதை காணமுடிகிறது. இதனை அறிந்த லாஸ்லியாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் தற்போது உண்மைகளை உடைத்துள்ளார். 

அவர் கூறும் பொழுது.., 

"லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடலை இலங்கை கொண்டு வர இரண்டு வாரங்கள் ஆகும். கொரோனா காரணமாக இந்த கால தாமதம் தவிர்க்க முடியாதது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அவரது இறப்பு இயற்கையானது. தயவு செய்து  பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
ஆசிரியர் - Editor II