ட்ரோன் கமராக்களின் உதவியுடன் 117 சந்தேக நபர்கள் கைது : கண்காணிப்பு நடவடிக்கை தொடரும்..!

ட்ரோன் கமராக்களின் உதவியுடன் 117 சந்தேக நபர்கள் கைது : கண்காணிப்பு நடவடிக்கை தொடரும்..!
தனிமைப்படுத்தல் பகுதிகளில் உத்தரவுகளை மீறி நடமாடிய 117 சந்தேக நபர்களை ட்ரோன் கமராக்களின் உதவியுடன் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படும் வரை ட்ரோன் கமராக்களின் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேவேளை, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறிய குற்றச்சாட்டுக்காக 46 நபர்கள் நேற்று மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இவ்வாறான குற்றச்சாடடுக்காக 358 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன மேலும் கூறினார்.
ஆசிரியர் - Editor II