இணையத்தில் வைரலாகும் வலிமை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ரகசியம்..!

இணையத்தில் வைரலாகும் வலிமை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ரகசியம்..!
தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் "வலிமை". இப்படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

மேலும் இப்படத்தை, "சதுரங்க வேட்டை", "தீரன்", "நேர்கொண்ட பார்வை" ஆகிய படங்களை இயக்கிய வினோத் தான் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், தல அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வலிமை படத்தில் 70% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். 

அந்தவகையில், இதுவரை எடுக்கப்பட்ட இவர்கள் இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே சிறப்பாக வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக, இந்த படத்தில் அஜித் கார்த்திகேயா மோதும் காட்சிகள் தியேட்டரில் அனல் பறக்கும் அளவிற்கு இருக்குமாம். இந்நிலையில் நேற்று திடீரென நடிகர் கார்த்திகேயாவின் workout வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவியது.

இந்த படத்தின் climax காட்சிக்கான தயாரிப்புக்குதான் தற்போது கார்த்திகேயா கடும் உடற்பயிற்சி செய்து வருகிறாராம். இந்த காட்சிகளைதான் அடுத்த கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் படமாக்க இருக்கிறார்களாம். 

அந்தவகையில், 2021 "வலிமை" சம்பவம் தரமாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆசிரியர் - Editor II