மலிவு விலையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்..!

மலிவு விலையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்..!
கொரோனா நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர "ஜி - 20" நாடுகள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும், மலிவு விலையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பான "ஜி - 20" நாடுகளை சேர்ந்த நிதி அமைச்சர்கள் கூட்டம் "வீடியோ கான்பரன்ஸ்" வாயிலாக நேற்று நடந்தது. 

இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது :-

"கொரோனா பெருந்தொற்று காலத்திற்கான சர்வதேச நடவடிக்கைகள் குறித்து "ஜி - 20" நாடுகளை சேர்ந்த நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் இணைந்து கடந்த ஏப்ரலில் செயல் திட்டத்தை வகுத்தனர்.

இந்நிலையில் கொரோனா நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர "ஜி - 20" நாடுகள் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். மலிவு விலையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்."

இவ்வாறு பேசினார்.
ஆசிரியர் - Editor II