இணையத்தில் வைரலாகும் அருண் விஜய்யின் சினம் பட போஸ்டர்..!

இணையத்தில் வைரலாகும் அருண் விஜய்யின் சினம் பட போஸ்டர்..!
"என்னை அறிந்தால்" படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஏறுமுகமாக இருப்பவர் அருண் விஜய். 

வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் அருண் விஜய் நடிக்கும் படங்கள் வரிசையாக ஹிட் அடித்து வருவதால், தன்னுடைய சம்பளத்தை கூட சமீபத்தில் ஏற்றி விட்டதாக தகவல்கள் வெளியானது.

மேலும், அருண் விஜய் நடிப்பில் "அக்னிச் சிறகுகள்" , "பாக்ஸர்", "சினம்", "வா டீல்" போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. ஒவ்வொரு படமும் வேறு வேறு கதை களத்தை கொண்டிருப்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சினம் படக்குழுவினர் நரம்பு புடைக்க காக்கிச்சட்டையில் மாஸாக இருக்கும் அருண் விஜய்யின் புகைப்படத்தை பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டர் வெளியான உடனேயே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது. 

ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கியுள்ள "சினம்" படத்தை மூவி ஸ்லைடர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும், முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷனில் உருவாகியிருக்கும் சினம் படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 
ஆசிரியர் - Editor II