அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் நிலையில் சுவிஸ் நபர் : காரணம் இது தான்..!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் நிலையில் சுவிஸ் நபர் : காரணம் இது தான்..!
அவுஸ்திரேலியாவில் பணி நிமித்தம் குடியேறிய சுவிஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தற்போது நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தெரியவருகையில்..,

தற்போது 37 வயதாகும் ஃபேபியோ என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பணி நிமித்தம் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் குடியேறியுள்ளார்.

ஆனால் 2019 ஆம் ஆண்டின் இறுதியில், ஃபேபியோவின் குடியிருப்பில் இருந்து ஏராளமான போதை மருந்து பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர் சுவிஸ் குடிமகன் என்பதால் உடனடியாக நன்னடத்தை சோதனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதனால் தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதில் அவர் தோல்வியை சந்தித்தால், அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் பிறந்த ஃபேபியோ அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் முன்னர் வரை சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் வசித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II