கொரோனா மருந்தினை பரிசோதிக்க பரிசோதனை எலியாக இலங்கையர்களை பயன்படுத்த முடியாது : நாமல் ராஜபக்ச..!

கொரோனா மருந்தினை பரிசோதிக்க பரிசோதனை எலியாக இலங்கையர்களை பயன்படுத்த முடியாது : நாமல் ராஜபக்ச..!
"உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளிக்கும் வரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்தப் போவதில்லை" என, அமைச்சர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த மருந்தினையும் இலங்கை பயன்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உலக சுகாதார ஸ்தாபனமோ அல்லது உலக நாடுகளோ எந்த கொரோனா மருந்திற்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச, இதன் காரணமாக இலங்கை அந்த மருந்தினை பெற்று மக்களிற்கு வழங்க கூடிய நிலையில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனா வைரஸ் மருந்தினை பரிசோதிப்பதற்கான பரிசோதனை எலியாக இலங்கையர்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முன்னைய அரசாங்கம் சிலவகை நோய்களிற்கான மருந்துகளை இலங்கையில் சோதனை செய்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆசிரியர் - Editor II