புற்று நோயால் பாதிக்கப்பட்டு வரும் தவசியின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டிய தளபதி விஜய்..!

புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் தவசிக்கு, நடிகர் தளபதி விஜய் அவர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

"வருத்தப்படாத வாலிபர்" சங்கம் படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் தவசி. அந்த படத்திற்கு பின்னர் "ரஜினிமுருகன்", "கொம்பன்", "விசுவாசம்" போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் "அண்ணாத்த" படத்தில் கூட துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தவசி.

மேலும், "கிழக்கு சீமையிலே" படம் துவங்கி கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வரும் இவர் எண்ணற்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந் நிலையில், நடிகர் தவசி புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. அதில் பேசியுள்ள தவசி தான் 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருவதாகவும், தமக்கு இப்படி ஒரு நோய் ஆண்டவன் கொடுப்பான் என்று நினைத்து பார்க்க இல்லை என்றும் கூறி இருக்கிறார் நடிகர் தவசி.

அதேபோல போதிய பணம் இல்லாததால் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறியுள்ள தவசி தனக்கு சக கலைஞர்கள் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தவசி உதவி கேட்டு செய்யுமாறு இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், பலரும் அந்த வீடியோவில் சூரி மற்றும் சிவகார்த்திகேயனை டேக் செய்தும் இருந்தனர். இதையடுத்து சிவகார்த்தியேகன் சார்பாக 25,000 ரூபாயும் சூரி சார்பாக 20,000 ரூபாயும் வழங்கப்பட்டது. அதே போல விஜய் சேதுபதி 1 லட்சம் ரூபாயை அளித்திருந்தார்.

அந்த வகையில் தளபதி விஜய் அவர்களும் அமைதியாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல், நடிகர் தவசிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

இது பற்றிய பதிவு காணொளியில் உள்ளது.
ஆசிரியர் - Editor II