இலங்கைக்கு போதைப் பொருளை அனுப்பும் குழுவுடன் தொடர்புடைய மூவர் கைது : பொலிஸார் அறிவிப்பு..!

இலங்கைக்கு போதைப் பொருளை அனுப்பும் குழுவுடன் தொடர்புடைய மூவர் கைது : பொலிஸார் அறிவிப்பு..!
வெள்ளிக்கிழமை வெலிகமவில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள், இலங்கைக்கு போதைப்பொருட்களை வழங்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

வெள்ளிக்கிழமை வெலிகமவில் 100 கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருட்களுடன் விசேட அதிரடிப்படையினர் மூவரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கும் இலங்கைக்கு போதைப் பொருட்களை வழங்கும் முக்கிய நபர்களிற்கும் தொடர்புள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த போதைப்பொருட்களை இலங்கைக்கு அனுப்பியவரை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கைது செய்யப்பட்டவர்கள் வெலிகம மாத்தறையை சேர்ந்தவர்கள், மூன்றாவது நபர் கொடிக்காவத்தையை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் - Editor II